ஏ -9 சாலையில் விழுந்த மரத்தை அகற்ற கடற்படை உதவி

மெதவச்சி, பூனேவ பகுதியில் நிலவும் காற்று காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த ஒரு மரத்தை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

பலத்த காற்று மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கண்டி-யாழ்ப்பாணம் (ஏ -9) சாலையில் பூனேவ பகுதியில் ஒரு மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூனேவ பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய முகாம் முன்னால் உள்ள சாலையில் இவ்வாரு மரம் விழுந்ததுடன் குறித்த மரத்தை விரைவாக அகற்றி சாலையில் போக்குவரத்தை மீட்டெடுக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படை விழிப்புடன் உள்ளது.