கடற்படை மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஒருவர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 05 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படையின் மற்றொரு நடவடிக்கை திருகோணமலை, சர்தாபுர பொலிஸ் அதிரடிப்படையுடன் இனைந்து திருகோணமலை, பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத விற்பனைக்காக ஒரு கடையில் ஒளிந்து வைக்கப்பட்ட மதன மோதக 257 கண்டுபிடிக்கப்பட்டதுடன் கடையின் உரிமையாளரை கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய முத்தூர் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை, கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டார்.