மோசமான வானிலை காரணத்தினால் பல பகுதிகளுக்கு கடற்படை நிவாரண குழுக்கள் இணைக்கப்படும்

சீரற்ற வானிலை காரணமாக தீவின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் ஏற்படும் இயற்கை பேரழிவுෙகளுக்கு உதவும் இலங்கை கடற்படை இந்த நாட்களில் பெய்த மழை காரனத்தினால் தீவின் பல பகுதிகளில் நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 2019 டிசம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில், கிங் ஆற்றின் குறுக்கே உள்ள அகலிய, தொடங்கொட மற்றும் வக்வெல்ல பாலங்களில் உள்ள கழிவுகளை வெள்ளத்துக்கு முன்பு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. இதுக்காக கடற்படை சுழியோடி மற்றும் கடற்படை மரையின் படையின் குழுவினர் இணைக்கப்படுள்ளனர். அங்கு கடற்படையினர் விரைவாக கழிவுகளை அப்புறப்படுத்தி, நீர் ஓடச் செய்தன.

மேலும், யான் ஓயாவில் தண்ணீர் நிரம்பி வழிகின்றதால் கஹடகாஸ்டிகிலிய பகுதி மக்களுக்கு கடற்படை நிவாரணம் அளித்து வருகிறது. கடற்படை மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் (4RU) ஏராளமான மாலுமிகள் இதுக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.