கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பீடி இலைகளை கடற்படையால் கண்டுபிடிப்பு

2019 டிசம்பர் 06 ஆம் திகதி காலை துனுக்காய் பகுதியிவ் உள்ள இலுப்புகடவாய் கடல்கரையில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது 123 கிலோகிராம் பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படையால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையில் நடத்தப்படுகின்ற ரோந்து நடவடிக்கைகளின் போது, துனுக்காய் பகுதி இலுப்புகடவாய் கடல்கரையில் அருகில் உள்ள காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டலங்களை பரிசோதித்தபோது குறித்த பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பீடி இலைகளை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கடந்த காலத்தில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முலம் பீடி இலைகள் கடத்தலில் ஈடுபட்ட பல கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாரான சட்டவிரொத கடத்தல் நடவடிக்கைகள் தடுக்க கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது.