போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

போதைப்பொருள் வைத்திருந்த 03 பேரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 08 ஆம் திகதி கின்னியா மற்றும் புத்தலத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இலங்கையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதையும், போதைப்பொருள் வைத்திருப்பதையும் கட்டுப்படுத்த இலங்கை காவல்துறையினர் இலங்கை காவல்துறையினருடன் சேர்ந்து கின்னியா, சமச்சத்தீவு பகுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு பாதையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று பரிசோதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. குறித்த மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கின்னியாவில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து கின்னியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புத்தலத்தில் கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, 100 கிராம் ஹாஷிஸ்வுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள், 21 மற்றும் 29 வயதுடைய மாதம்பே மற்றும் புத்தலம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்./p>

குறித்த போதைப்பொருள் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டன. குறித்த சந்தேக நபரகள் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.