கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கடற்படையால் கைது

கடற்படையினரினால் இன்று (2019 டிசம்பர் 10) சாவகச்சேரி, பல்லிகுடா பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடலோரப் பகுதிகளின் கடல் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் போது சாவகச்சேரி, பல்லிகுடா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் காணப்பட்டன, கடற்படை உடனடியாக மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்தது. இங்கு ஒரு சந்தேக நபரின் வசம் இருந்து 06 கிலோகிராம் கடலாமை இறைச்சியை கடற்படையினர் மீட்டுள்ளனர். சந்தேக நபர் செட்டியார்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர், மோட்டார் சைக்கிள் மற்றும் கடலாமை இறைச்சி ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக பூனரின் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், இந்த ஆண்டில் மட்டும் எட்டு சந்தர்ப்பங்களில் 188 கிலோகிராம் கடலாமை இறைச்சி கடற்படை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏராளமான நேரடி கடலாமைகளை கடற்படை காவலில் எடுத்து கடலுக்கு விடுவித்துள்ளது.

அழிந்து போகிற கடலாமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்புத் திட்டஙடகள் தொடங்கியுள்ளதுடன் அடையாளம் காணப்பட்ட கடற்கரைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள ஏராளமான கடலாமைகளை விடுவிப்பதற்கும் கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளதுடன் கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.