வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய பல் மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா

‍ வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிறுவனத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பல் மருத்துவமனை 2019 டிசம்பர் 10, அன்று வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேராவுடைய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படை உறுப்பினர்களின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பல் சிகிச்சைக்காக புதிதாக நிர்மானிக்கப்பட்ட இந்த பல் மருத்துவமனை திறப்பு விழாவில் கடற்படை பல் சேவைகள் இயக்குநர் டாக்டர் கொமடோர் நயனா விஜெய்தோரு உட்பட வடமேற்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.