சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது

மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் இன்று (2019 டிசம்பர் 12) நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்வதுக்காக கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அங்கு, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொண்று பரிசோதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதுடன் 350 கடல் அட்டைகள் அங்கு இருந்து கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன. மேலதிக விசாரணையில் போது மீனவர்கள் சட்டவிரோதமாக இரவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இரவில் கடல் அட்டைகளைப் பிடிக்க அனுமதி வழங்கப்படுவதில்லாத காரணத்தினால் இவர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டது. இவர்கள் 33,36 மற்றும் 50 வயதான மன்னார் பல்லெமுனே மற்றும் வங்காலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரண்டு டிங்கி படகுகள், இரண்டு வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் 350 கடல் அட்டைகள் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள், டிங்கி படகுகள், வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் கடல் அட்டைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், 2019 டிசம்பர் 9 ஆம் திகதி இதே பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது 409 கடல் அட்டைகளுடன் நான்கு நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டது. அதன் படி 2019 ஆண்டில் மன்னார் பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சுமார் 2000 கிலோ கிராம் உலர் கடல் அட்டைகள், 900 கடல் அட்டைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பல நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.