பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை ஆதரவு

பலத்த மழை காரணத்தினால் புத்தலம், ரந்தியகம பகுதி நீரில் மூழ்கியதுடன் அப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுக்காக இலங்கை கடற்படை 2019 டிசம்பர் 11 ஆம் திகதி முதல் அமல்படுத்தும் நிவாரணப் பணியைத் தொடங்கியுள்ளது.

நாட்டில் எந்தவொரு பேரழிவிலும் உதவ தயாராக உள்ள இலங்கை கடற்படை இந்த நாட்களில் நாட்டில் உள்ள நிலவும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்கிறது. அதன்படி, புத்தலம் மாவட்டத்தில் வெண்ணப்புவ பிரதேச செயலக பிரிவில் உள்ள ரந்தியகம கிராமத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தண்ணீரை கடலுக்கு பம்ப் செய்யும் பணியை கடற்படை மேற்கொண்டுள்ளது.

கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) உடன் இணைக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் குழுக்களை கடற்படை இப் பணிகளுக்காக நிறுத்தியுள்ளதுடன் மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் வெள்ள அபாயத்தில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி கடற்படை நிவாரண குழுகள் பாலங்கள், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கழிவுகளை விரைவுபடுத்துவதற்கும், நீரோட்டத்தை சீராக்குவதற்கும் ஏற்கனவே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.