"க்ரீன் அண்ட் ப்ளூ டிரைவ்" - கடற்கரை சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கடற்படையின் முயற்சி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் புதுமையான கருத்தாக்கமான "கிரீன் அண்ட் ப்ளூ டிரைவ்" (நீல ஹரித சங்கிராமய) இன் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முயற்சி டிசம்பர் 14 ஆம் திகதி மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்டது.

இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள அழகிய கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க இதுபோன்ற பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது, அதன்படி கோல் ஃபேஸ்சில் சுத்தம் செய்வதற்கான துப்புரவுப் பிரச்சாரத்தை கடற்படை இன்று நடத்தியது. கோல் ஃபேஸ் சுற்றுப்புற கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டு கழிவு இல்லாத சூழலாக மாற்றப்பட்டது.

மேலும், தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைகளை சுத்தம் செய்வதில் கடற்படை பங்களித்தது. ஹபராடுவ கடற்கரை மற்றும் ஹம்பாந்தோட்டை நகரின் சுற்றியுள்ள கடற்கரை பகுதியும் கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டன. இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் மாசுபட்ட இந்த கடற்கரை பகுதிகள் கடற்படையால் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, அந்த பகுதிகளை கழிவுகள் இல்லாததாக மாற்றின.

மேலும்,கடற்படை நாடு முழுவதும் கடற்கரை பகுதிகளை மாசு இல்லாத பகுதிகளாக வைத்திருக்க துப்புரவு பிரச்சாரங்களை அடிக்கடி மேற்கொள்கிறது, மேலும் இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க உதவுகிறது.