போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 15 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த 03 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதையும், போதைப்பொருள் வைத்திருப்பதையும் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை இலங்கை காவல்துறையினருடன் சேர்ந்து மன்னார்,கொத்தபிட்டி பகுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமான 03 நபர்களை சோதனை செய்யப்பட்டது. குறித்த நபர்களிடமிருந்து 490 மிலிகிராம் ஹெராயின் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்களை கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் (01) போதைப்பொருள் வாங்க வந்தவர் என்றும் மற்ற இருவர் (02) அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் சிலாவதுர பகுதிகளில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேபோல், கடந்த சில நாட்களாக ஏராளமான போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது மற்றும் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதில் உறுதியாக உள்ளது.