போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 டிசம்பர் 15 ஆம் திகதி மோதர பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.

இலங்கையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதையும், போதைப்பொருள் வைத்திருப்பதையும் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை இலங்கை காவல்துறையினருடன் சேர்ந்து மோதர பகுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி, மோதர பகுதியில் நிர்வகிக்கும் சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று நிருத்தி கடற்படையும் காவல்துறையும் சேர்ந்து சோதனை செய்துள்ளனர். அங்கு முச்சக்கர வண்டியில் இருந்த நபரிடம் இருந்து உள்ளூர் கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் சந்தேகநபர் மற்றும் முச்சக்கர வண்டி கைது செய்யப்பட்டது.

சந்தேகநபர் மட்டக்குலிய பகுதியில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும் சந்தேக நபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் உள்ளூர் கஞ்சா குறித்து மோதர பொலிசாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.