வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன் கடற்படையால் மீட்பு

திருகோணமலை, லங்காபட்டுன பகுதியில் 2019 டிசம்பர் 15 ஆம் திகதி வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்களை கடற்படை மீட்டுள்ளது.

இலங்கையின் கடல்வாழ் வளங்களை பாதுகாப்பதில் இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களிக்கின்றது. அதன்படி, திருகோணமலை, லங்காபட்டுன கடற்கரைப் பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது சதுப்புநில புதர்களில் மறைத்து வைக்கப்பட்ட பல பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி குறித்த பெட்டிகளில் இருந்து வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன் கண்டுபிடிக்கப்பட்டன.

கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் காரணத்தினால் இந்த மீன்களை மறைத்து சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக பிடித்த மீன்களை மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெடிபொருளைப் பயன்படுத்தி மின் பிடிப்பது மூலம் இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் அழகிய பவளப்பாறைகள் உட்பட கடல் வளங்களை அழிக்க அச்சுறுத்துகிறது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.