பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா தாமரை குளம் மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில்

படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா, 2019 டிசம்பர் 13, அன்று, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், தாமரை குளம் மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் கலந்து கொண்டார்.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைத் தலைவர், அட்மிரல் ரவீந்திர விஜெகுநரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், மேலாண்மை தணிக்கைத் துறை இயக்குநர் முதல்வர்கள், முப்படையின் மூத்த அதிகாரிகள் பட்டதாரிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி பணியாளர்கள் பாடநெறி தொடங்கப்பட்டதுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புப் படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 157 அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். அதன்படி, கடற்படையைச் சேர்ந்த 33 அதிகாரிகளும், இராணுவத்தைச் சேர்ந்த 76 பேரும், விமானப்படையைச் சேர்ந்த 30 அதிகாரிகளும் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர். பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா, சூடான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பதினெட்டு வெளிநாட்டு அதிகாரிகளும் பாடநெறியின் முடிவில் பட்டம் பெற்றனர்.

இந்த பாடத்திட்டத்தில் சிறந்த மாணவ அதிகாரிகளாக மேஜர் ரொஹான் ஏகநாயக்க (இராணுவம்), லெப்டினன்ட் கமாண்டர் ரங்கன அதுகோரல (கடற்படை) மற்றும் படையணி தலைவர் பிரணீத் கொடிகார (விமானப்படை) ஆகியோர் பாடத்திட்டத்தின் சிறந்த மாணவர் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு ‘Golden Owl’ குறியீடு வழங்கப்பட்டது. மேஜர் ரொஹான் ஏகநாயக்க (இராணுவம்), இந்தியாவின் கொமடோர் பிரசாந்த் மிஸ்ரா (கடற்படை) மற்றும் படையணி தலைவர் பிரணீத் கொதிகார (விமானப்படை) சேனா நிர்வாக மரியாதை விருதைப் பெற்றனர்.