தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை ஆதரவு

2019 டிசம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

மீன்பிடிக்க சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துவது மீன் மற்றும் கடல் வளங்களை சேதப்படுத்துகிறது, மேலும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடல் வளங்களை பாதுகாப்பதற்கான மேலும் ஒரு நடவடிக்கை யொன்று இன்று கடற்படையால் மட்டக்களப்பு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போது 25 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.