இலங்கை கடற்படையின் 237 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 237 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 422 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 டிசம்பர் 16 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இன் நிகழ்வுக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய, இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமடோர் சமன் பெரேரா ஆகியோர் உட்பட, கடற்படை தலைமையகத்தின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

மேலும் இப் பயிற்சியின் போது சிறந்த வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதள்கள் வழங்கப்பட்டன. அப்போது 237 வது ஆட்சேர்ப்பில் என்.எச்.ஏ ஜயமால் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றுள்ளார். ஜே.ஏ.எஸ்.ஜி.எம் ஜயலத் சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை என்.எச்.எஸ்.எம் ஜயமால் மற்றும் பீ.எச்.எஸ்.எம் ஹேரத் பெற்றுள்ளனர். எஸ்.டி.ஏ.எல் சமரதுங்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் மேலும் 237 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக “நன்திமித்ர” பிரிவு விருது பெற்றுள்ளது.

மேலும் 237 வது ஆட்சேர்ப்பு பிரிவின் வீரர்களுடைய கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் மற்றும் கடற்படை கலாசார பிரிவினரால் சமர்பிக்கப்பட்ட கலாசார நிகழ்ச்சியின் பின் குறத்த வெளியேறல் அணிவகுப்பு நிரைவடைந்தது.