நயினாதீவிலிருந்து, ஸ்ரீபாத மலை ஏறி, கிரிவெஹரவுக்கு செல்லும் ‘தீர்மானத்தின் பாத யாத்திரை

மனிதாபிமான நடவடிக்கையில் ஊனமுற்ற வீராங்கனைகளின் தன்னம்பிக்கையை உயர்த்துவதற்காக, நயினாதீவு முதல் கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் கடற்படையின் மற்றும் இராணுவத்தின் இரண்டு ஊனமுற்ற விரர்களுக்கு கடற்படை உதவியது.

அதன்படி, கடற்படை விரர் எம்.பீ.டபிள்யூ குமார மற்றும் இராணுவ வீரர் ஆர்.டபிள்யூ.பி பியதிஸ்ஸ ஆகியோர் நயினாதீவு பண்டைய விஹாரையில் மத அனுசரிப்புகளை நிறைவு செய்ததோடு, வட மாகாண தலைமை மற்றும் நயினாதீவு புராண ராஜா மகா விஹாராயாவின் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரர் நடத்திய பிரித் ஆசீர்வாதங்களுடன் பாத யாத்திரை தொடங்கி யாழ்ப்பாணம், கிலினொச்சி, வவுனியா, அனுராதபுரம், தம்புல்ல, கண்டி, ஹட்டன், ஸ்ரீபாத மலை, , கினிகத்ஹேன, அவிச்சாவேலை, களனி, காலி, மாத்தரை, கதிர்காமம் வந்து இறுதியாக கிரிவேஹெர புனித இடத்தை வணங்க உள்ளனர்.

தாய்நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அமைதிக்காக உடலின் கண்கள், கால்கள், கைகள் தியாகம் செய்த ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள வீர வீரர்களின் தன்னம்பிக்கையை வலியுறுத்துவதற்காக இடைவிடாத விடாமுயற்சியுடன் இரு வீர ஊனமுற்ற படைவீரர்களால் இந்த நடை தொடங்கப்பட்டது, கடற்படை வீரர் எம்.பி.டபிள்யூ குமாரவின் முடக்கப்பட்டுள்ள கால் மற்றும் இராணுவ விர்ர் ஆர்.டபிள்யூ.பி பியதிஸ்ஸ முற்றிலும் பார்வையற்றவர் என்பது இந்த நடைப்பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும், இந்த நடைப்பயணத்தின் ஒரு பாதி இப்போது நிறைவடைந்துள்ளது, மேலும் அவர்கள் 2019 டிசம்பர் 14, அன்று களனி ராஜமஹா விகாரையை வணங்கினர். கடற்படை மற்றும் இராணுவத்தின் முழு உதவியுடனும் அவர்கள் களனி தாகேபாவைச் சுற்றி ஒரு அங்கி பிரசாத விழாவை (காஞ்சுகா பூஜை) நடத்தினர். அடுத்த நாள் (டிசம்பர் 15) இரண்டு விர்ர்களும் கொழும்பில் உள்ள கடற்படையின் (Light House Galley) யில் ஒரு சுவையான காலை உணவு வழங்கப்பட்டன.

பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுனாரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் ஆதரவின் கீழ் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சுவாரஸ்யமான முயற்சியை இலங்கை காவல்துறையும் பொது மக்களும் ஆதரிக்கின்றனர்.