வாலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த 03 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து 2019 டிசம்பர் 16 ஆம் திகதி சேருநுவர பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 02 வாலம்புரிகளுடன் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை, காவல்துறையினருடன் இனைந்து சேருநுவர பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக ஒரு விடுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 02 வாலம்புரிகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் இந்த இரண்டு வாலம்புரியும் 1.6 கிலோகிராம் எடையுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

குறித்த வாலம்புரிகள் விற்பனைக்கு தயாராக இருந்த போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பங்குளம, சிங்ஹகம மற்றும் சேருநுவர பகுதிகளில் வசிக்கின்ற 34, 37 மற்றும் 57 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மற்றும் வாலம்புரிகள் குறித்து சேருநுவர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் கடல்வழிப் பகுதியிலும், நாட்டின் உள் பகுதிகளிலும் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுபடுத்துவதில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.