சந்தேகத்திற்குரிய ஒரு ஈரானிய மற்றும் இரண்டு இலங்கை நாட்டவர்கள் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 17 ஆம் திகதி சிலாவத்துர கடல் பகுதியில் ரோந்து சென்றபோது சட்டவிரோதமாக டிங்கி படகொன்று மூலம் பயணித்த ஒரு ஈரானிய மற்றும் இரண்டு இலங்கை நாட்டவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் பகுதியில் நடைபெறுகின்ற சட்டவிரோத புலம்பெயர்வுகள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க கடற்படையால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி சிலாவத்துர கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற டிங்கி படகொன்று கன்காணிக்கப்பட்டதுடன் குறித்த படகு மேலும் ஆய்வு செய்யப்பட்டது. குறித்த படகில் ஒரு ஈரானியரும் ஒரு இலங்கையரும் இருந்ததுடன் அவர்களை விசாரித்த போது முறையான அனுமதியின்றி படகொன்று மூலம் கடலில் பயணித்தாக தெரியவந்தது. பின்னர் குறித்த நபர்கள் மற்றும் டிங்கி படகு கடற்படையால் கைது செய்யப்பட்டன.

கடற்படையின் மேலதிக விசாரணையின் போது, சிலாவத்துரா கடற்கரையில் வெளிநாட்டவரின் வழிகாட்டியாகத் தோன்றிய ஒருவரை கடற்படை அடையாளம் கண்டுள்ளது, அங்கு வெளிநாட்டு நாட்டினருக்கான வழிகாட்டியாக செயல்பட எந்த ஆவணங்களையும் கடற்படைக்கு சமர்ப்பிக்கத் இவர் தவறிவிட்டார். அதன்படி, இந்த நபர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானிய நாட்டவர் 31 வயது மற்றும் இலங்கை நாட்டவர்கள் 27 மற்றும் 57 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டது.

குறித்த நபர்கள் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக சிலாவத்துர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த முறையில், சட்டவிரோதமாக வெளிநாட்டினருடன் கடல் பார்வையிட செல்வது மூலம் ஏற்படுகின்ற விபத்துக்களைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.