கேரள கஞ்சா கொண்டு சென்ற 03 நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 டிசம்பர் 17 ஆம் திகதி ஜா எல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 4 கிராம் 200 மிலி கிராம் கேரள கஞ்சா கொண்டு சென்ற 03 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வதையும், போதைப்பொருள் வைத்திருப்பதையும் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை காவல்துறையினருடன் சேர்ந்து ஜா எல பகுதியில் ஒரு சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடற்படை மற்றும் ஜா எல போலீஸார் ஒருங்கிணைந்து ஜா எல பகுதியில் அமைக்கப்பட்ட சாலைத் தடையில் சந்தேகமான ஒரு மோட்டார் வண்டி சோதிக்கும் போது அங்கு இருந்த நபர்களிடமிருந்து இந்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின் குறித்த சந்தேகநபர்கள் மற்றும் மோட்டார் வண்டி கைது செய்யப்பட்டன.

இந்த சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மற்றும் கொச்சிகடை பகுதி சேந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்கள், மோட்டார் வண்டி மற்றும் கேரள கஞ்சா குறித்து பமுனுகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.