சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (ஆகஸ்ட் 15) கரைக்கு கொண்டுவரப்பட்டன.

ශஇலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தைப் பயன்படுத்தும் மீனவர்கள் மற்றும் கடல் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை கடற்படை, இன்று அம்பலன்கொடை மீன்வளத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘ரந்தீர் புதா' என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் ஒரு மீனவருக்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பு காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர உதவி வழங்கியது.

மீன்பிடிக் கப்பலின் உரிமையாளர் அளித்த தகவல்களின் அடிப்படையில், தெற்கு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு படகை குறித்த இடத்துக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. காலி துறைமுகக் கடல் பகுதியில் கடற்படை படகில் குழுவினர் காயமடைந்த மீனவரை மீட்டெடுத்து அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்கி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இவர் பலபிட்டிய பகுதிகளில் வசிக்கின்ற 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதன்படி, காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளி மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், சர்வதேச மரபுகளுக்கு ஏற்ப கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இலங்கை கடற்படை புரிந்துகொண்டுள்ளதோடு இலங்கையர்களுக்கு கடலில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதுக்கு தொடர்ந்து பதிலளித்து வருகின்றது.