இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 டிசம்பர் 18 ஆம் திகதி புத்தலம் திலையாடியாகம பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை மற்றும் புத்தலம் காவல்துறையினர் 2019 டிசம்பர் 18 ஆம் திகதி, புத்தலம் திலையாடியாகம பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ஒரு வீட்டில் இருந்த இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஒரு கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெராயின் ஆகியவற்றை மீட்க முடிந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அப்பகுதியில் வசிக்கின்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை புத்தலம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் மூலம் நாட்டில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விற்பனை செய்யும் ஏராளமான நபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.