சுமார் 2.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து டிசம்பர் 18, 2019 அன்று ஊர்காவற்துறை, அல்லாபிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் மற்றொரு சோதனை இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினரால் ஊர்காவற்துறை, அல்லாபிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களை சோதிக்கும் போது அவர்களிடமிருந்து சுமார் 2.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவை பறிமுதல் செய்த பின்னர் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கேரள கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இவ்வாரு கைது செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா குறித்து ஊர்காவற்துறை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.