இந்திய அமைதி காக்கும் நினைவுச்சின்னத்திற்கு இந்திய கடற்படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2019 டிசம்பர் 18 அன்று இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இன்று காலை பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.

மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ், மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந் நிகழ்வுக்காக கலந்து கொண்டனர்.