வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருபத்தெட்டு (28) நபர்கள் கடற்படையால் மீட்பு

கலாவெவ வழிதல் காரணத்தினால் இன்று (2019 டிசம்பர் 21) அனுராதபுரம் 500 இபலோகம கிராம சேவா பிரிவில் டிக்வெவ கிராமத்தில் இடம்பெயர்ந்த இருபத்தெட்டு (28) நபர்கள் கடற்படை மீட்டது.

அதன்படி இந்த நாட்களில் ஊற்றி விழுகிற பலத்த மழை காரணத்தினால் கலாவெவ வழிதலில் ஏற்பட்ட வெள்ளத்தில் இடம்பெயர்ந்தவர்களை இலங்கை கடற்படை இவ்வாரு மீட்டுள்ளது.

தற்போது தீவை பாதிக்கும் மோசமான வானிலை நிலைமைகளை எதிர்கொள்ள பல நிவாரண குழுக்கள் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், முழு தீவையும் உள்ளடக்கிய கடற்படை கட்டளைகளில் அவசரநிலைகளைக் கையாள கடற்படை நிவாரண குழுக்கள் தயாராக உள்ளன.