வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்கள் கடற்படையினரால் மீட்பு

அத்திமலை ஏரி நிரம்பி வழிந்ததால் இடம்பெயர்ந்த நான்கு பேரை 2019 டிசம்பர் 20 ஆம் திகதி கடற்படை மீட்டது.

அதன்படி, யால காட்டில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் போது இரண்டு நாட்களாக ஊற்றி விழுகிற பலத்த மழை காரணமாக அத்திமலை ஏரி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தற்போது தீவை பாதிக்கும் மோசமான வானிலை நிலைமைகளை சமாளிக்க பல நிவாரண குழுக்கள் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், முழு தீவையும் உள்ளடக்கிய கடற்படை கட்டளைகளில் அவசரநிலைகளைக் கையாள கடற்படை நிவாரண குழுக்கள் தயாராக உள்ளன.