இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

நான்கு நாள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இன்று (2019 டிசம்பர் 21,) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க ஆகியோரிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்ற பின்னர், அவரை கிழக்கு கடற்படை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

கிழக்கு கடற்படை கட்டளை கேட்போர் கூடத்தில் ஒரு நல்ல கலந்துரையாடலுக்குப் பிறகு, கிழக்கு கடற்படை பகுதி தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க மற்றும் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோர் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

மேலும், இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கிழக்கு கடற்படை கப்பல் தளம் மற்றும் கடற்படை அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார், பின்னர் கடல் மையத்தில் மதிய உணவு சாப்பிட்டார்.