பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி

தீவில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில், பின்வரும் அவசரக் கட்டளைகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பல அவசர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி, வடமேற்கு கடற்படை பகுதியில் உள்ள நவகத்தேகம, பாலம, பொல்பிதிகம, கருவலகஸ்வேவ, இகினிமிட்டிய மற்றும் மன்னதீவு பகுதிகளுக்கான ஏழு நிவாரண குழுக்களும்

கிழக்கு கடற்படை கட்டளையின் பொலன்னருவ, செங்கலடி மற்றும் மனம்பிட்டி பகுதிகளுக்கு நான்கு நிவாரண குழுக்கள்

வட மத்திய கடற்படை கட்டளையின் இபலோகம, புல்னாவ மற்றும் தம்புத்தேகம பகுதிகளுக்கு நான்கு நிவாரண குழுக்கள்

தெற்கு கடற்படை கட்டளையின் கதிர்காமத்துக்கு இரண்டு நிவாரண குழுக்கள்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென்கிழக்கு கடற்படை கட்டளையில் எட்டு நிவாரண குழுக்கள், இருபத்தைந்து (25) கடற்படை நிவாரண குழுக்கள், 25 சிறிய படகுகள் மற்றும் 112 கடற்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


எத்திமலை பகுதியின் புகைப்படங்கள்


இபலோகம பகுதியின் புகைப்படங்கள்


பானம பகுதியின் புகைப்படங்கள்


செல்ல கதிர்காமம் பகுதியின் புகைப்படங்கள்


இங்கினிமிட்டி பகுதியின் புகைப்படங்கள்