அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 டிசம்பர் 21 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின, நிபுன மற்றும் ருஹுன நிருவனங்களில் கடற்படையினர் காலி கோட்டை அது சுற்றியுள்ள கடற்கரைகள் மற்றும் தங்காலை பரவிவெல்ல ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேற்கெண்டுள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் பெரிதும் சேதமடைந்த இந்த கடற்கரைகள், கடற்படையினர்களின் அர்ப்பணிப்பால் சாத்தியமானது. இன் நிகழ்வுகளில் தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட ஏராளமான கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இதேபோன்ற திட்டங்கள் தற்போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இயற்றப்பட்ட நீல பச்சை என்ற கருத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கடற்படை தளங்களிலும் இவ்வாரான கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.