பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி
தீவில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில், பின்வரும் அவசரக் கட்டளைகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பல அவசர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதன் படி, நவகத்தேகம, சாலியவெவ மற்றும் எலுவங்குளம பகுதிகளுக்கு மூன்று நிவாரண குழுக்கள்
கிழக்கு கடற்படை கட்டளையில் பொலன்னருவ, கிராண் மற்றும் புனானி பகுதிகளுக்கு நான்கு நிவாரண குழுக்கள்,
வட மத்திய கடற்படை கட்டளையில் கல்னேவ, தம்புத்தேகம மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளுக்கு நான்கு நிவாரண குழுக்கள்
தெற்கு கடற்படை கட்டளையின் செல்ல கதிர்காமம் பகுதிக்கு ஒரு நிவாரண குழு,
தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பானம பகுதியில் ஒரு நிவாரண குழு உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 13 (13) கடற்படை நிவாரண குழுக்கள் மற்றும் 15 சிறிய படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
|
|




































