சட்டவிரோதமாக மணல் அள்ளிய 9 பேர் கைது

திருகோணமலை ராகுலி நகரில் 2019 டிசம்பர் 21 ஆம் திகதி சட்டவிரோதமாக மணல் அள்ளிய 9 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

திருகோணமலை ராகுலியில் கடற்படை மேற்கொண்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, ஐந்து டிராக்டர்கள், ,ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு க்யூப் மணல் ஆகியவற்றை கடற்படை கைப்பற்றியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்ட திருகோணமலை முதூரில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மக்கள், டிராக்டர்கள்,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மணல் க்யூப்ஸ் முதூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சட்டவிரோத மணல் சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த சட்டவிரோத வணிகமானது சுற்றுச்சூழல் விளைவுகளை எதிர்மறையாக ஏற்படுத்துவதால் கடற்படையின் தலையீடு சரியான நேரத்தில் இருக்கும்.