375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்துகளுடன் ஒருவர் கடற்படையினால் கைது

2019 டிசம்பர் 23 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சீனா பே பகுதியில் பொலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, பொலிஸ் அதிரடிப்படையுடன் ஒருங்கிணைந்து கடற்படையால் திருகோணமலையில் உள்ள சீன விரிகுடாவில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சிறிய லாரி ஒன்று காணப்பட்டது, லாரியை மேலும் தேடியதன் மூலம் இந்த அளவு னமோதக மருந்து மாத்திரைகள் மீட்கப்பட்டன. விசாரணையில், இந்த னமோதக மாத்திரைகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர் 74 வயதான சீனா விரிகுடா பகுதியில் வசிப்பவர் என அடையாலம் காணப்பட்டுள்ளார்.சந்தேக நபர், மதனமோதகா மருந்துகள் மற்றும் லாரி மேலதிக விசாரணைக்காக திருகோணமலை கலால் அலுவலகத்திற்க்கு ஒப்படைத்தனர்.