கேரள கஞ்சாவுடன் மூன்று (03) நபர்கள் கைது

புத்தலத்தின் மொல்லிபுரம் கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா 80.25 கிலோ கிராம் உடன் 03 நபர்கள் 2019 டிசம்பர் 23 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினால், மொல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 03 நபர்களைக் அவதானித்தனர், மேலும், சந்தேக நபர்களுக்கு சொந்தமான ஒரு வல்லம் (பாரம்பரிய படகு) மற்றும் மோட்டார் சைக்கிளும் கடற்படை காவலில் எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 32, 38 மற்றும் 47 வயதுடைய மொல்லிபுரம் மற்றும் புத்தலத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சந்தேக நபர்கள் அவர்களிடம் உள்ள பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தலத்தின் பொலீஸ் சிறப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.