கடற்படையினரால் கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது

மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உதவியுடன் கடற்படை, இன்று (டிசம்பர் 25, 2019) காலை மன்னாரின் பெரியகார்சல் பகுதியில் வைத்து கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் ஒருவரை கைது செய்த்து.

மன்னார், ஊழல் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்புடன் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் பெரியகர்சல் பகுதில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபரைக் கண்டறிந்தது. சந்தேக நபரைத் விசாரிக்கையில், அவர் வசம் இருந்த கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது, அதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் 28 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கேரள கஞ்சாவுடன் மன்னார் போலீசில் சட்ட மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.