சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் மீன்வள துறையுடன் இணைந்து 2019 டிசம்பர் 28 அன்று அம்பலங்கொடை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்த ஏழு நபர்களை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் வளங்களை அழிப்பதைத் தடுக்கும் நோக்கிலமீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடற்படை ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது நான்கு (04) மீன்பிடிக் கப்பல்கள் விளக்குகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அவதானிக்கப்பட்டனர், அதன்படி ஏழு (07) மீனவர்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அம்பலங்கொடையில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. நான்கு மீன்பிடிக் கப்பல்கள், நான்கு வெளி எரிப்பு இயந்திரங்கள், நான்கு எல்.ஈ.டி பல்புகள் மற்றும் 13 பேட்டரிகள் காவலில் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

மீன்பிடிக் கப்பல்கள், ஒளி விளக்குகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்வது குறித்து மீன்வள மற்றும் நீர்வளத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.