சட்டவிரோதமாக மீன்பிடிக்கப் பயன்படும் சார்ஜர்கள் உட்பட பல ஜெலட்னைட் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது

திருகோணமலை, நிலவேலி மற்றும் பொடுவாக்கட்டு பகுதிகளில் டிசம்பர் 29 ஆம் திகதி கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு மீன்பிடி சார்ஜர்கள் உட்பட பல நீர் ஜெல் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது, நிலாவேலி சல்லிசாம்பல்தீவு கடற்கரையின் கரையோரம் உள்ள ஒரு தென்னை மரத்தில் மறைக்கப்பட்ட இரண்டு சார்ஜர்களை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இந்த சார்ஜர்கள் தயாரிப்புக்காக ஒரு நீர் ஜெல் குச்சி, இரண்டு 2-அடி நீளமான பாதுகாப்பு நூல்கள், இரண்டு மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 100 கிராம் அடையாளம் தெரியாத வெடிமருந்து பயன்படுத்தியதாக கடற்படை அடையாளம் கண்டுள்ளது.

அதே தினம் திருகோணமலை பொடுவாக்கட்டு கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு மீனவரின் மீன்பிடி தடியில் பையொன்று சிக்கியதுடன் அதை கடற்படைக்கு ஒப்படைத்தார். பின்னர் கடற்படை குறித்த பை சோதித்த போது ஐந்து ஜெலக்னைட் குச்சிகள், மூன்று டெட்டனேட்டர்கள் மற்றும் 1 அடி நீளமுள்ள பாதுகாப்பு நூல் ஆகியவற்றைக் கண்டறிந்தது. குறித்த பொருட்களை கடற்படையின் காவலில் வைக்க கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பொருட்கள் பின்னர் சட்டவிரோத மீன்பிடிக்க பயன்படுத்தப்படுவதற்கான நோக்கத்துடன் மறைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது ஏற்படும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க கடற்படை நிலையான கவனத்துடன் உள்ளது.