கிளைபோசேட் அடங்கிய உரங்களுடன் ஒருவர் கைது

2019 டிசம்பர் 30 அன்று மஹஇலுப்பல்லம, கல்மடுவ பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து நடந்திய சோதனையின் போது கிளைபோசேட் அடங்கிய உரங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

கடற்படை மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து மஹஇலுப்பல்லம, கல்மடுவ பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத கிளைபோசேட் கொண்ட 610 உரம் பாக்கெட்டுகளை (61 கிலோ கிராம்) மீட்டனர். இந்த உரம் கடையில் விற்கத் தயாராக இருக்கும் இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்ட இந்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக தம்புத்தேகம வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.