ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவது இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது

2019 அக்டோபர் 01 அன்று இலங்கை கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தின் தேசியக் கொடியை ஏற்றுவது இன்று (2020 ஜனவரி 01) அதிகாரப்பூர்வமாக விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.

குறித்த விசேட அணி வகுப்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மகேஷ் டி சில்வாவின் மேற்பார்வையில் இடம்பெற்றதுடன் லெப்டினன்ட் கமாண்டர் (ஆயுத) ஷாந்த அம்பன்வெல விசேட அணி வகுப்பின் பொறுப்பாளராக நடவடிக்கைகள் மேற்கொண்டார்.