சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த கடற்படை ஊடக சந்திப்பொன்று நடத்தியது

சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் மற்றும் அதன் சட்ட கட்டமைப்பைப் பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த ஊடக சந்திப்பொன்று கடற்படை ஊடக ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தலைமையில் இன்று (2020 ஜனவரி 2) பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

ஏராளமான சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ய இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத இடம்பெயர்வு குறித்து இலங்கை கடற்படைக்கு ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் சிறப்பு செய்தி அனுப்பியுள்ளதுடன், சட்டவிரோத இடம்பெயர்வுகளைத் தடுக்க இலங்கை கடற்படை மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் சமூக பாதிப்புகள் மற்றும் தனியார் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஊடக சந்திப்பில் உரையாற்றிய லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார 2019 ஆம் ஆண்டில் மனித கடத்தலின் புள்ளிவிவரங்களை முன்வைத்து, மனித கடத்தலில் அதிகரிப்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மோசடி செய்பவர்களால் சிலர் சூழ்ச்சிகளுக்கு இரையாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடல் பயணங்களில் ஏற்படும் அபாயத்தை விளக்கிய அவர், நாட்டின் பிம்பத்தை கெடுக்கும் அதே வேளையில் இதுபோன்ற அபாயங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தையும் சொத்துக்களையும் இழக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் விரிவாகக் கூறுகையில், திறமையான கடற்படைப் பணியாளர்கள் மற்றும் வலுவான கண்காணிப்பு அமைப்பின் உதவியுடன் கடற்படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாவும் தேவைப்படும்போது கடற்படை மற்ற பாதுகாப்பு சேவைகளின் உதவியை நாடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இறுதியாக, மனித கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து எந்த நேரத்திலும் கடற்படைக்கு தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஊடக சந்திப்புக்காக ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் முழு வீடியோவையும் பின்வரும் இணைய இணைப்பு வழியாக பார்க்கலாம்.
https://youtu.be/tSSiDdp4cdA