கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (ஜனவரி 04) யாழ்ப்பாணத்தின் கைட்ஸ் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக பங்கேற்கும் இலங்கை கடற்படை, யாழ்ப்பாணத்தின் கைட்ஸ் காவல்துறையின் உதவியுடன் கேரள கஞ்சா 2.5 கிலோ கிராமுடன் இரண்டு சந்தேக நபர்களை கேரள கஞ்சாவை விற்கத் தயாராகி கொண்டிருந்தபோது கைது செய்துள்ளது. 23 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் கய்ட்ஸ் சங்கானேவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணையில் சந்தேக நபர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 140 வழக்குகளில் 3.5 டொன்னுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்துள்ளதுடன், 221 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.மேலும், நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.