வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த இரண்டு நபர்கள் (02) கைது

நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் 2020 ஜனவரி 05 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த இருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்துள்ளன.

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து மற்றொரு சோதனை நடவடிக்கை நடத்தியது. அங்கு சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனையிட்டபோது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2900 வலி நிவாரணி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் விட்டில் இருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்யப்ட்டனர்.

சந்தேக நபர்கள், 39 மற்றும் 52 வயதுடைய அப்பகுதியில் வசிப்பவர்கள் என்று அடையாலம் காணப்பட்டுள்ளனர். கட்டான காவல்துறையினர் சந்தேக நபர்கள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.