சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) நபர்கள் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காலி மீன்பிடித்துறை அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 05 அன்று தொடண்தூவ கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட்ட 04 நபர்கள் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளால் ஏற்படும் மீன் மற்றும் கடல் வளங்கள் குறைவதைத் தடுக்க கடற்படை தீவைச் சுற்றியுள்ள நீரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காலி மீன்வள அலுவலகத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட இதேபோன்ற நடவடிக்கையின் போது, காலி தொடண்தூவ கடலில் சட்டவிரோதமான மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்த 04 பேரை கடற்படை கைது செய்தது. சந்தேக நபர்களுடன், சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட 03 டிங்கிகள், LED பல்புகள் மற்றும் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 36, 42 மற்றும் 58 வயதுடைய காலி, அக்மீமன மற்றும் தொடண்தூவ பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பிற பொருட்கள் தொடர்பாக காலி மீன்வள உதவி இயக்குநரகம் அலுவலகம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.