தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்ச்சி முகாம் வெலிசரயில் தொடங்கியது

இலங்கை தன்னார்வ கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவுக்கு இணையாக 2019 ஜனவரி 06 ஆம் திகதி வருடாந்த பயிற்ச்சி முகாமொன்று (Annual training camp) வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தொடங்கியது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில கழந்துகொன்டார்.

இலங்கை தன்னார்வ கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவு விழா 2020 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது. குறித்த பயிற்ச்சி முகாமில் தொடக்க விரிவுரை இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந் நிகழ்வுக்காக கழந்துகொண்ட கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் தம்மிக குமாரவினால் "கடற்படை மரபுகள் மற்றும் சடங்குகள்" என்ற கருப்பொருளில் ஒரு விரிவுரை நடத்தினார். அங்கு இயக்குநர் கடற்படை நடவடிக்கைகள், கேப்டன் அருண வீரசிங்க "கடற்படையின் பங்களிப்பு" பற்றிய கருப்பொருளில் ஒரு முக்கிய உரை நிகழ்த்தினார்.

இன் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி கொமடோர் டோனி பெரேரா உட்பட தன்னார்வ கடற்படையின் பல அதிகாரிகள், மூத்த வீர்ர்கள் மற்றும் இளநிலை வீர்ர்கள் கழந்துகொன்டதுடன் குறித்த பயிற்சி முகாம் ஜனவரி 24 ஆம் திகதி வரை நடைபெறும்.