துறைமுக அதிகாரசபையின் புதிய தளபதியை சந்தித்த கடற்படைத் தளபதி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, துறைமுக அதிகாரசபையின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்கவை துறைமுக ஆணையம் அலுவலகத்தில் இன்று (2020 ஜனவரி 06) சந்தித்தார்.

இச் சந்திப்பு துறைமுக அதிகாரசபையின் தளபதியாக கடமையேற்ற பின் கடற்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பாகும்.முதலாவதாக, கடற்படைத் தளபதி புதிய தளபதிக்கு தனது வாழ்த்துக்களைச் சேர்த்தார். அங்கு இவர்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டதுடன் உத்தியோகபூர்வ கூட்டத்தை குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.