சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் அட்டைகள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜனவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் மிரிஞ்சிமுனை பகுதியில் நடந்திய சோதனையின் போது கடல் அட்டைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை செயல்பட்டு வருகிறது. அதன் படி காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து யாழ்ப்பாணம், மிரின்சிமுனை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 21 கிலோ கிராம் கடல் அட்டைகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் 41 வயதுடைய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கடல் அட்டைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநர் இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.