தேசிய டெங்கு தடுப்பு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 07 முதல் 9 ஆம் திகதி வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கிய தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சும் மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து செயல்படுத்தும் இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து கடற்படை கட்டளைகளும் உள்ளடக்கி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மாகால்ல, பெட்டிகலவத்த மற்றும் தங்கெதர அகிய பகுதிகளும் கிழக்கு கடற்படை கட்டளை, திருகோணமலை, அன்புவலிபுரம் மற்றும் ஓர்ஸ்ஹில் ஆகிய பகுதிகளிலும், வடக்கு கடற்படை கட்டளையின் அனைத்து முகாம்களையும் இந்த டெங்கு தடுப்பு திட்டங்கள் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் குறித்த முழுமையான விழிப்புணர்வை வழங்குவதோடு, கடற்படை முகாம்களின் வளாகத்திலும் ஏராளமான டெங்கு ஒழிப்பு திட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய கொடிய டெங்கு அச்சுறுத்தல் திட்டத்திற்கு மாலுமிகள் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.


வடக்கு கடற்படை கட்டளையில் டெங்கு தடுப்பு திட்டம்


கிழக்கு கடற்படை கட்டளையின் டெங்கு தடுப்பு திட்டம்


தெற்கு கடற்படை கட்டளையின் டெங்கு தடுப்பு திட்டம்