கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாக்க கடற்படையால் ‘ஆயிரம் சதுப்புநில செடிகள் நடப்பட்டது

இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள இலங்கை கடற்படை சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்கும் திட்டத்தின் கீழ் சதுப்புநில செடிகள் நடவு திட்ட மொன்றை செயல்படுத்தியது.

வடக்கு கடற்படை கட்டளையை மையமாகக் கொண்ட இந்த திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை செயல்படுத்தப்பட்டதுடன் இலங்கை கடற்படையால் ஆயிரம் சதுப்புநில செடிகளை நடவு செய்ய முடிந்தது. அதன்படி, வட கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் எலார, கஞ்சதேவ மற்றும் வேலுசுமன ஆகிய நிருவனங்களில் 900 சதுப்பு செடிகளும், இலங்கை கடற்படைக் கப்பல் கோடய்ம்பர நிருவனம் மூலம் 100 சதுப்பு செடிகளையும் வடக்கு தீபகற்பத்தின் கடற்கரைப் பிரதேசங்கள் முழுவதும் சுமார் 1000 சதுப்புநில செடிகள் நடவு செய்தன. இந்நிகழ்வில் கடற்படைத் துணைத் தளபதியும், வடக்கு கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் கபில சமரவீர மற்றும் ஏராளமான கடற்படையினர் கலந்து கொண்டனர்.

சதுப்புநில பாதுகாப்பு திட்டத்திற்கு கூடுதலாக, இலங்கை கடற்படை கடற்கரை சுத்தம் செய்தல், கடலாமை பாதுகாப்புதல், உயிர் எரிவாயு உற்பத்தி மற்றும் பவள பாதுகாப்பு போன்ற பல திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் கடறபடை இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது. இது தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.