கடற்படை மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையின் போது, நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு நபர் கைது

நிலாவேலி தேவுகல் கடற்கரை பகுதியில் 2020 ஜனவரி 9 ஆம் திகதி காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.

வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீன்வள வளங்கள் மற்றும் அழகான பவளப்பாறைகள் ஆகியவற்றில் தீங்கு விளைவிக்கும் என்பதால், இலங்கை கடற்படை இந்த வளங்களையும் கடல் சூழலையும் பாதுகாப்பதற்காக வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி கடற்படை மற்றும் காவல்துறையினர் நிலவேலி தேவிகல் கடற்கரை பகுதியில் நடத்திய இதேபோன்ற நடவடிக்கையின் போது, ஒரு சந்தேகத்திற்குரிய நபர் கண்கானிக்கப்பட்டார். மேலும் அவரை சோதனை செய்த போது சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தப்படுகின்ற இந்த சார்ஜர்கள் அவரது வசம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சார்ஜர்களில் 02 நீர் ஜெல் குச்சிகள், 01 மின்சார அல்லாத டெட்டனேட்டர், 01 மின்சார டெட்டனேட்டர் மற்றும் 02 இரண்டு பாதுகாப்பு நூல்கள் இருந்தன. கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை எரக்கண்டி பகுதியில் வசிக்கும் 49 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் பொருட்களுடன் மேலதிக விசாரணைக்காக குச்சவேலி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.