440 சங்குகளுடன் மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை, ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகம் மற்றும் கிரிந்த மீன்வள ஆய்வாளர் அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 07 ஆம் திகதி கிரிந்த பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 440 சங்குகள் வைத்திருந்த மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை மேற்கொண்ட மற்றொரு சோதனை நடவடிக்கை ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகம் மற்றும் கிரிந்த மீன்வள ஆய்வாளர் அலுவலகமுடன் இனைந்து கிரிந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இரண்டு (02) வீடுகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள 440 சங்குகளுடன் மூன்று நபர்கள் கைது செய்யபட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் திஸ்ஸமஹாராமய பகுதியில் வசிக்கின்ற 21 முதல் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் மற்றும் சங்குகள் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக கிரிந்த மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.