கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை விநியோகிக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு இதுவரை ஒரு பற்றாக்குறையாக இருந்த வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை இன்று (2020 ஜனவரி 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் கடற்படை கட்டளைகளில் உள்ள வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டது

இந்த உபகரணங்கள் கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் வெடிகுண்டுகள் அகற்றும் பணியாளர்களின் பொருள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. இது கடற்படைக்கு ஏராளமான பணத்தை மிச்சப்படுத்த உதவியுள்ளது.

இங்கு Nonmagnetic Tool Kit, EOD Exploder, EOD Tripod, EOD Hook & Line Set, EOD Rake, Explosive Filling Box, Trolley Mounted Mirrors, Portable Mirrors, EOD Plodders மற்றும் Rechargeable LED Torch ஆகிய வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை இவ்வாரு விநியோகிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கடற்படைத் தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் உட்பட ஏராளமான மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.